ரயிலில் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

ரயிலில் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
X

ரயிலில் கடத்தப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்

ரயிலில் கடத்தப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா, குட்கா, மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் கடந்த சில மாதங்களாக ரயிலில் பயணிக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணமும் கடத்தல் நடவடிக்கைளை தடுக்கும் வண்ணமும் சிறந்த பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 பவுன் தங்க நகை மற்றும் ஆறு செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று விசாகப்பட்டினம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா கடத்துவதாக ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது விசாகப்பட்டினம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நிலை காவலர்கள் நரேந்திர குமார், சிவகுமார், அருண்குமார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது சந்தேகத்துக்குரிய இரு மூட்டைகள் இருந்தது அதனை பரிசோதனை செய்ததில் கஞ்சா மற்றும் குட்கா இருந்தது தெரியவந்தது.

கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா மற்றும் 6 கிலோ குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து ரயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். கஞ்சா மற்றும் குட்கா எடுத்து வரப்பட்ட மர்ம நபர்களை போலீசாரை கண்டதும் தப்பியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதேபோல் சாம்ராஜ் நகர் திருப்பதி செல்லும் ரயிலில் ரயில்வே உதவி ஆய்வாளர் முரளி மனோகரன் பெண் தலைமைக்காவலர் உஷாராணி சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் கொண்டு வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 100 மது பாட்டில்களை கைப்பற்றினர். கடத்தி வரப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!