ராஜேந்திர பாலாஜியுடன் பேசிக் கொண்டிருந்ததாக இருவரிடம் விசாரணை

ராஜேந்திர பாலாஜியுடன் பேசிக் கொண்டிருந்ததாக இருவரிடம் விசாரணை
X

ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணை நடத்தப்படும் நபர்கள்  

ஜோலார்பேட்டையில் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக 2 இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடி வரை மோசடி புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்பில் பேசிக் கொண்டிருந்ததாக திருப்பத்தூர் அடுத்த அக்கரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!