நாட்றம்பள்ளியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

நாட்றம்பள்ளியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில் எம்எல்ஏ தேவராஜ் பங்கேற்றார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியில் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், நாட்றம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் வெண்மதி முனிசாமி, நாட்றம்பள்ளி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!