நாட்றம்பள்ளி அருகே கள்ளசாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

நாட்றம்பள்ளி அருகே கள்ளசாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
X
நாட்றம்பள்ளி அருகே கள்ளசாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட அக்ரகாரம் ஊராட்சி கோல்காரன் வட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அக்ரஹாரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அக்ரஹாரம் மலை அடிவாரத்தில் கோல்காரன் வட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் கள்ளசாராயம் விற்பனையில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவரை கைது செய்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!