பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள்

பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள்
X

பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள்

பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில்  தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள். அலட்சியமாக இருக்கும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு கடந்த ஒரு வாரமாக குப்பை கழிவுகளை தெருக்களில் கொட்டித் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த குப்பை கழிவுகளால் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஒன்றிய நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!