ஏலகிரி மலையில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது
ஏலகிரியில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்காக பூமிபூஜை நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூர் ஊராட்சியில் கொட்டையூர் கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக 4 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவ மாணவியருக்கு பூப்பந்து விளையாடுவதற்கான உள் விளையாட்டு அரங்கம் கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக பூப்பந்து விளையாட 1084 சதுர மீட்டர் பரப்பளவில் 335 சதுர மீட்டர் அளவிற்கு பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டைக் கண்டு களிக்கும் வகையில் ஆண் மற்றும் பெண் வீரர்கள் ஓய்வு அறை ஆண் மற்றும் பெண் வீரர்கள் கழிப்பறை குடிநீர் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகளுடன் தனித்தனியாக இரண்டு உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்காக செங்கம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu