நாட்றம்பள்ளி  அருகே நடந்த விபத்தில் முன்னாள் சுகாதார ஆய்வாளர்  உயிரிழப்பு

நாட்றம்பள்ளி  அருகே நடந்த விபத்தில்  முன்னாள் சுகாதார ஆய்வாளர்  உயிரிழப்பு
X
இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எதிரில் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு உயிரிழந்தார்

நாட்றம்பள்ளி அருகே லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து முன்னாள் சுகாதார ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழவ்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட வெலக்கல்நத்தம் பகுதியில் வசிப்பவர் சீனன் (73) . இவர் வெலக்கல்நத்தம் பகுதியில், தன்னுடைய மனைவி சாரதாம்மாள் உடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது, எதிரில் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு உயிரிழந்தார். உடனிருந்த அவரது மனைவி சாரதம்மாள் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்தவர்கள் அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர் சீனன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!