புரோப்பிலீன் ஆக்சைடு கசிவு: தீயணைப்பு துறையின் சார்பில் முன்னேற்பாடுகள்
பாதுகாப்பிற்காக நிற்கும் தீயணைப்பு துறையினர்
மகாராஷ்டிரா மாநிலம் கோலேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் பியாரெலாக் முஜாவர் (வயது 36) இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தேவையான புரோப்பிலீன் ஆக்சைடு சென்னை மணலி பகுதியில் இருந்து டேங்கர் லாரியில் ஏற்றிக் கொண்டு மகாராஷ்டிரா நோக்கி இன்று காலை 6 மணிக்கு வேலூர் வழியாகச் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ஆத்தூர்குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது டேங்கர் லாரி டிரைவர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்திவிட்டு லாரியின் டயர் செக் பண்ணி கொண்டு இருக்கும்போது ஏதோ சத்தம் கேட்டதும் பார்த்த போது புரோப்பிலீன் ஆக்சைடு கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து உடனடியாக சென்னை மணலிக்கு தகவல் தெரிவித்தார் வண்டியில் ஆக்சைடு என்பது செயற்கையான அதிகம் எரியக்கூடிய மற்றும் நிறமற்ற திரவமாகும். இதனால் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருள் என்பதாலும் சில நேரங்களில் வெடிக்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முன்னேற்பாடுகளை செய்தனர்
நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் முனிரத்தினம் மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் இணைந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் மார்க்கம் போக்குவரத்து தடை செய்தனர் மேலும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்
மேலும் இது குறித்து தகவலறிந்ததும் வேலூர் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அப்துல் பாரி உதவி அலுவலர்கள் பழனி மற்றும் முகந்தன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.
டேங்கர் லாரியில் ஏற்பட்ட கசிவு சரிசெய்ய சென்னை மணலி பகுதியில் குழுவினர் விரைந்து வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu