முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
X

கே.சி வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணம்

ஜோலார்பேட்டையில் கே சி வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நகை பணம் மற்றும் சொகுசு கார்கள் சிக்கியது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி வீரமணியின் மீதும் அவரது குடும்பத்தினர், பங்குதாரர்கள் மீதும், தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக கடந்த 15.09.2021 அன்று வேலூர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.

அதன்படி முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு தொடர்புடைய மற்றும் நெருங்கிய உறவினர்கள், முன்னால் அரசியல் உதவியாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோர்களின் இருப்பிடம், நெருங்கிய தொடர்புடைய சந்தேகிக்கப்படும் இடம் என மொத்தம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 16.09.2021 இன்று காலை முதல் நடத்திய 13 மணி நேரத்திற்க்கும் மேலாக நடத்திய சோதனையில் 34,01,060 ரொக்கம், 1.80 லட்சம் மதிப்பிலான அன்னிய செலாவணி டாலர், 9 சொகுசு கார்கள்(ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் கார்), 4.987 கிலோ தங்கம்

மேலும் 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள், முக்கிய சொத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது,

இதுமட்டுமின்றி வீட்டில் 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணல் குவிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அதன் விசாரணையானது தற்போது வரை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!