ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம்

ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம்
X

ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் துறை சார்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் 112 வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் சைபர் குற்றங்கள் குறைய வங்கி வளாகத்தில் பின்பற்ற வேண்டிய கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வங்கி அலுவலக நேரங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பான அறிவுரைகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும், எக்காரணம் கொண்டும் ஓடிபி கேட்டோ, அக்கவுண்ட் எண் கேட்டோ, ஏடிஎம் பின் கேட்டோ வங்கியில் பணி புரிபவர்கள் அழைப்பது இல்லை என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும், சைபர் குற்றங்கள் குறித்த அறிவிப்புகளை போஸ்டர்கள் பேனர்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் லோன் வழங்குவதாக அழைப்பு வந்தால் வங்கிக்கு நேரில் வந்து விவரங்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும், தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தொலைபேசி எண்களை வாடிக்கையாளர்கள் பார்வையில் தெரியும் படி ஒட்டி வைக்க வேண்டும்.

மேலும் சைபர் குற்றங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் மற்றும் வங்கி அலுவலர்களின் நடவடிக்கைகள் பற்றி விவரிக்கப்பட்டது. இதில் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!