திருப்பத்தூர் மாவட்டத்தில் மதமாற்றம் அதிகம் : அர்ஜுன் சம்பத் பேச்சு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மதமாற்றம் அதிகம் :  அர்ஜுன் சம்பத் பேச்சு
X

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகமாக மதமாற்றம் நடைபெறுகிறது என்று பாரதமாதா பூஜையில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகமாக மதமாற்றம் நடைபெறுகிறது பாரதமாதா பூஜையில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்று பாரதமாதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

அப்போது பேசிய அவர்:

பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கொண்டாட இருக்கிறோம். நாமெல்லாம் தமிழர்கள், நாமெல்லாம் இந்துக்கள். பாரதத்தாய்க்கு வழிபாடு நடத்தி பூஜை செய்கிறோம்.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் மதமாற்றம் அதிகமாக நடைபெறுகிறது. அவை அனைத்தும் மாற வேண்டும். மதமாற்ற தடை சட்டம் வர வேண்டும். நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். கட்சிகளில் இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அவர்கள் மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இந்துக்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை. சாதி,மதம் கடந்து அனைவரும் இந்துக்களாக தற்போது பாரதமாதா பூஜைகளை செய்து வருகிறோம். அதில் இன்று சிறப்பு பூஜைகளில் நீங்கள் கலந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பேசினார். இதில் மாநில செயலாளர் செல்வம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future