குழந்தை கடத்துபவர்கள் என நினைத்து செல்போன் டவர் ஊழியர்களை தாக்கிய பொதுமக்கள்

குழந்தை கடத்துபவர்கள் என நினைத்து செல்போன் டவர் ஊழியர்களை தாக்கிய பொதுமக்கள்
X

குழந்தை கடத்துபவர்கள் என நினைத்து தாக்கப்பட்ட செல்போன் டவர் ஊழியர்கள்

ஜோலார்பேட்டை அருகே குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து செல்போன் டவர் ஊழியர்களை கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி ஊராட்சி சின்னா கவுண்டனுார் பகுதியில் அங்கும் இங்குமாக இரு வடமாநில வாலிபர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். ஆனால் அவர்கள் பேசும் மொழி இவர்களுக்கு புரியாததால் குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து இருவரையும் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் பிடியில் இருந்து அவர்களை மீட்டு ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் தனியார் செல்போன் டவரில் அலைவரிசை பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். என தெரியவந்தது

மேலும் இவர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள செல்போன் டவரின் அலைவரிசையை ஆய்வு செய்வதற்காக சுமார் 2 கி.மீட்டர் வரை அங்கும் இங்குமாக சுற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் பணிபுரியும் தனியார் செல்போன் டவர் நிறுவன அதிகாரிகள் தங்கள் நிறுவனத்தில் தான் பணிபுரிகிறார்கள் என உறுதியளித்தனர்.

அதன்பின் போலீசார் அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு இருவரையும் அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story