நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
X

நாட்றாம்பள்ளி அருகே நடத்த சாலை விபத்தில் இருவர் பலி

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில்  அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புத்துகோவில் ஜீவாநகர் பகுதியில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் மல்லகுண்டா பகுதியை சேர்ந்த டைலர் ஜெய்சங்கர்(வயது 29) மற்றும் கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் (வயது 26) ஆகியோர் பலத்த காயமடைந்த உயிருக்கு போராடினர்.

அப்போது பகுதி மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!