நாட்றம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
X

ஏரியில் மூழ்கிய சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர்

நாட்றம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கிய வாலிபரின் உடலை 4 மணி நேரமாகப் போராடி தீயணைப்புத்துறை மீட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கௌரவன் (வயது 38) இவர் சென்னையில் பேக்கரி கடையில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்துள்ளார் நிலையில் இவருடைய நண்பரான பெருமாள் (வயது 30) இவர்கள் இருவரும் பச்சூர் அடுத்த பொத்தான்குட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று அங்கு இருவரும் மது அருந்திவிட்டு பின்னர் ஏரியில் குளித்துள்ளனர் அப்போது இருவருக்கும் இக்கரையில் இருந்த அக்கரைக்கு யார் முந்தி செல்கிறார்களோ அவருக்கு ஆயிரம் ரூபாய் என பேசி ஏரியின் நீந்தி சென்றுள்ளனர்

அப்போது பெருமாள் என்பவர் கரையில் நீந்தி வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் கௌரவன் வராததால் பெருமாள் பயந்துபோய் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு வந்த பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரமாகப் போராடி சடலமாக மீட்டனர்.

மேலும் இதுதொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!