அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் கிரைம் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் கிரைம் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு
X

மாணவிகளுக்கு சைபர் கிரைம் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

ஜோலார்பேட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் விளையாட்டில் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜோலார்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 200 மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றியும், ஆன்லைன் விளையாட்டுகள் பற்றியும் அதனால் ஏற்படும் உயிர்சேதம் மற்றும் பண இழப்பு ஆகியவற்றினை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், தற்கொலைகள் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் முடிவல்ல, ஆன்லைன் குற்றங்கள் மற்றும் அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், இணையவழி குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சைபர் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இணையவழி பணமோசடி பற்றிய புகார்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 155260 ஐ 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளவும், , சைபர் குற்றங்களை பற்றிய புகாரை இணையவழியில் https://www.cybercrime. பதிவு செய்யலாம் என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!