ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான ஆட்டோ

ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நாகமங்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் மோகன் (வயது 31). இவர் பர்கூரில் அமைந்துள்ள சிப்காட் கம்பெனிக்கு ஜோலார்பேட்டைக்கு ரயில் நிலையத்திலிருந்து வெளிமாநில ஆட்களை அழைத்து செல்ல ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

வெளிமாநில ஆட்களை அழைத்துக்கொண்டு பர்கூருக்கு செல்லும்போது, ஜோலார்பேட்டை அருகே உள்ள மங்கம்மாகுளம் பகுதியில் திடீரென ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இதில் ஆட்டோவை ஓட்டி வந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெளிமாநில ஆட்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ டிரைவர் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த வெளி மாநிலத்தவர் 7 பேரையும் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story