கே.சி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் போராட்டம்

கே.சி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் போராட்டம்
X

கே.சி. வீரமணி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

கேசி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் கைகளில் கருப்பு கொடியை ஏந்தி தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களுக்கு மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அவருக்கு சொந்தமான வீடு ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து காலை 6 மணி முதல் தற்போது வரை இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும் இதை அறிந்த வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் அவர் வீட்டின் முன்பு குவிந்து கருப்புக் கொடிகளை ஏந்தி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அமைச்சர் முகத்தை காண்பித்தால் மட்டுமே நாங்கள் இங்கு இருந்து கலைந்து செல்வோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் அதிமுக நிர்வாகி இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றபோது அவர்களை கீழே இறக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!