நாட்றம்பள்ளி அருகே  கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது

நாட்றம்பள்ளி அருகே  கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது
X

நாட்றம்பள்ளி அருகே  கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது

நாட்றம்பள்ளி அருகே  மது பாட்டில்களை வாங்கி சென்று கள்ளத்தனமாக விற்ற இருவர் கைது.  157 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் இருந்து கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பதற்காக புதுப்பேட்டை அரசு மதுபான கடையில் இருந்து ராதாகிருஷ்ணன் மற்றும் சக்தி ஆகியோர் வாங்கிச் சென்றனர் அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் நாட்றம்பள்ளி போலீசார் ஈடுபட்டிருந்தனர்

அவ்வழியாக வந்த இருவரையும் சோதனை செய்தபோது அதில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்று கள்ளத்தனமாக விற்பதற்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது

அதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் (வயது 45) அவரிடம் இருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் சக்தி (வயது 45) அவரிடம் இருந்து 57 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!