10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை; ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை

10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை; ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை
X

பைல் படம்.

ஜாேலார்பேட்டை அருகே ரெட்டியூரில் 10ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டியூர் கிராமத்தைச் சார்ந்தவர் அன்பரசன். இவர் சென்னை பகுதியில் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக என்பதால் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். இளையமகள் ஹரணி (வயது 16) இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் பகுதியிலுள்ள வாரச் சந்தைக்கு காய்கறிகள் வாங்க அன்பழகனின் மனைவி ரூபா தனது மூத்த மகளுடன் சென்றுள்ளனர். பின்னர், மாலை 5 மணி அளவில் இருவரும் வீடு திரும்பும்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.

பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது தாயின் சேலையில் அவரது இளைய மகள் ஹரணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஜாேலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!