நாட்றம்பள்ளி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில்   தற்கொலை செய்து கொண்ட பெண்

நாட்றம்பள்ளி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில்   தற்கொலை செய்து கொண்ட பெண்
X
நாட்றம்பள்ளி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் வயிற்று வலி காரணம் காட்டி  தற்கொலை செய்து கொண்ட பெண் நாட்றம்பள்ளி போலிசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி மேல் மாமுடிமானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி மகள் சந்திரா (வயது 25) இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் கிருஷ்ணன் ( வயது 34) ஆகிய இருவருக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாத காரணங்களாலும் சந்திராவுக்கு அடிக்கடி வயிற்றுவலி காரணமாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சந்திராவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார் என‌ கூறப்படுகிறது அப்போது திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திராவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story