திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே முதியவர் தீக்குளிப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே முதியவர் தீக்குளிப்பு
X

தீக்குளித்த முதியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஊழியர்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்த முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம், உமராபாத் அடுத்த கதவாளம் பகுதியை சேர்ந்த நந்தன் (80) என்பவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தண்ணீர் தொட்டிக்கு அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார். உடலில் ஏற்பட்ட தீக்காயத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றுள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 90 சதவீதம் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இவரது நிலத்தை கோவிலுக்கு அளிக்குமாறும் அதற்கு பதிலாக வேறு ஒரு நிலம் கொடுப்பதாகவும் ஊர்மக்கள் கூறியிருந்த நிலையில், அதனை கொடுக்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது மன உளைச்சலில் இருந்த நந்தன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!