திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு
X

கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் குஷ்வாஹா வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கொரோனா நோய் தொற்று 3வது அலை தற்போது அண்டை மாநிலங்களில் அதிகம் தீவிரமடைந்து வருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்போது மூன்றாம் அலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் , திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் நோய்த் தொற்றில் இருந்து மக்கள் பாதுகாக்க இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜோலார்பேட்டை பகுதியில் இன்று கொரோனா நாள் வார விழிப்புணர்வு நாள் ஏற்படுத்தும் வகையில் பொது மக்கள் கூடும் பகுதிகளில் முகக் கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் கைகளை சுத்தமாகக் கழுவுவது எப்படி என பொதுமக்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா செய்து காண்பித்தார், அதனை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதேபோன்று வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் அப்பகுதியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வட்டாட்சியர் மோகன் வழங்கி கைகளை சுத்தமாகக் கழுவுவது எப்படி என பொதுமக்களிடம் காண்பித்தார் மேலும் இதேபோன்று பல்வேறு பகுதிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன இந்த நிகழ்வில் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story