திருப்பத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்

திருப்பத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி மற்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

திருப்பத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி மற்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி மற்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள்-2021 நடத்திடும் பொருட்டு. 4 நகராட்சிகளில் உள்ள 126 வார்டுகளுக்கு 299 வாக்குச்சாவடிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் உளள் 45 வார்டுகளுக்கு 48 வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம் 171 வார்டுகள் 347 வாக்குச்சாவடிகளில், வார்டு வாரியாக நிறைவு செய்யப்பட்ட மற்றும் திருத்தம் செய்யப்பட்ட 3,05,340 எண்ணிக்கையிலான புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டது

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செலவ் ராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் விலச்ன் இராசசேகர், ஹரிஹரன், செல்வன், நகராட்சி ஆணையாளர்கள் ஜெயராமராஜா, பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!