அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட குறைதீர்நாள் கூட்டம்

அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட குறைதீர்நாள் கூட்டம்
X

காலியாக உள்ள அதிகாரிகளின் இருக்கைகள்.

திருப்பத்தூர் நடைபெற்ற குறைதீர்நாள் கூட்டத்தில் அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் முகாம் அமைத்து மக்களின் குறைகளை மனுவாக பெற்ற நிலையில் இன்று வழக்கமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் வராததாலும் ஆங்காங்கே மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறை தீர்வு நாள் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆம்பூர் அருகே பைக் விபத்தில் இருவர் கவலைக்கிடம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வீரக்கோவில் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி டீ வாங்கி வருவதற்காக வீரக்கோவில் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சுப்பிரமணி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ந இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு இளைஞர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சுப்பிரமணியை மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்ட போது சுப்பிரமணி மீது இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய இளைஞர்கள் சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் அபுபக்கர் சித்திக் எனவும், இவர்கள் ஏலகிரி மலைக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பிய போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையால் 2023ஆம் ஆண்டிற்கான POLICE DUTY MEET தமிழ்நாடு போலீஸ் அகடமி சென்னையில் கடந்த 06-11-2023 முதல் 01-12-2023 வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறையினர் பல்வேறு போட்டிகளில் (DOG EVENTS, SCIENTIFIC AIDS TO INVESTIGATION PORTRAIT, PROFESSIONAL PHOTOGRAPHY, VIDEOGRAPHY, ANTI-SABOTAGE, COMPUTER AWARENESS) கொண்டனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம் தீவிர குற்ற தடுப்பு பிரிவை சேர்ந்த முதல் நிலைக் காவலர் திரு. சதீஷ்குமார் குற்றவாளியை அடையாளம் காணும் (SCIENTIFIC AIDS TO INVESTICATION PORTRAIT) பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற காவலரை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் அழைத்து பாராட்டினார். காவல் ஆய்வாளர் பழனி உடன் இருந்தார்.

ஆம்பூரில் இலவச மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கம், சென்னை பில்ராத் மருத்துவமனை மற்றும் ஆம்பூா் ரபீக் மருத்துவமனை சாா்பாக இலவச மருத்துவ முகாம் வா்த்தகா் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆம்பூா் நகர வா்த்தா் சங்க தலைவா் கே.ஆா். துளசிராமன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். செயலாளா் ஓ.வி. ராம்குமாா் வரவேற்றாா். மருத்துவ குழுவினா் சுமாா் 250 பேருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.

முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு ரத்தக் கொதிப்பு, சா்க்கரை அளவு, ஈசிஜி, எக்கோ ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. பொருளாளா் டி. காரக்த்திகேயன் நன்றி கூறினாா். துணைச் செயலாளா்கள் எம். காமராஜ், வி. அல்தாப் அஹமத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings