திருப்பத்தூர் மாவட்டத்தில் 78.69 சதவீதம் வாக்குப்பதிவு.

ஊரக உள்ளாட்சித்தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 78.69 சதவீதம் பதிவானது

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 4 ஒன்றியங்களில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 54 பேர் வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 79.64 சதவீதமும், கந்திலி ஒன்றியத்தில் 75.31 சதவீதமும், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 79.57 சதவீதமும், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 80.47 சதவீதமும் வாக்குகள் பதிவானது. 4 ஒன்றியங்களிலும் சேர்த்து 78.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

4 ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டு கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!