திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டது
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி மது விற்பனை தொடங்கியது

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த மாதம் 10ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதே நேரத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா நோய்த் தொற்றானது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளன இதன் காரணமாக இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தன .

அதன்படி இன்று காலை 10 மணி முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 39 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி அதாவது மது விற்பனை செய்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், மது வாங்கும் நபர்கள் முகக்கவசம் அணிந்து மது வாங்க வேண்டும் மேலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து வரவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் தற்பொழுது மது பிரியர்கள் டாஸ்மாக் கடையில் நீண்ட நேரம் காத்திருந்து அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி மது வாங்கி செல்கின்றனர் இதற்காக ஒவ்வொரு மது விற்பனை கடைகள் முன்பும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!