இருசக்கர வாகனம்- லாரி மோதி விபத்து பெண் பலி ஒருவர் படுகாயம்

இருசக்கர வாகனம்- லாரி மோதி விபத்து பெண் பலி ஒருவர் படுகாயம்
X

வாணியம்பாடி அருகே உழவர் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் காய்கறி ஏற்றி வந்தவர்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செக்குமேடு பகுதியை சேர்ந்த பவுனு மற்றும் ராஜகுமாரி ஆகியோர் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனைக்கு செய்து விட்டு பின்னர் அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது வாணியம்பாடி - ஆலங்காயம் செல்லும் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது பின்புறமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் பவுன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பவுன் உயிரிழந்தார். மேலும் அவரது உறவினரான ராஜ்குமாரி படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனர் விஜய் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!