/* */

ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்களுக்கு ஆன்லைன் டிக்கெட் பெறலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் ஆன்லைனில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்களுக்கு ஆன்லைன் டிக்கெட் பெறலாம்.
X

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் ஆன்லைனில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நாளை காலை வெளியிடப்பட உள்ளது. மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட கால தீராத நேயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் விதமாக இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

எனவே இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனம் செய்யவரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளதற்கான மருத்துவச் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். எனவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 April 2022 2:21 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  2. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...
  4. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி
  6. கோவை மாநகர்
    யானைக்கூட்டத்துடன் தாயை பார்க்க வந்த குட்டி யானை
  7. தொழில்நுட்பம்
    அரிய வான அணிவகுப்பில் ஆறு கிரகங்கள்: நாளை காணலாம்
  8. கோவை மாநகர்
    இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
  9. கல்வி
    இங்கிலாந்தில் படிக்க சிறந்த 5 கேமிங் படிப்புகள்
  10. இந்தியா
    தெலுங்கானா உருவான நாள் தெரியுமா..? டிஎன்பிஎஸ்சி -ல் ஒரு கேள்விங்க..!