திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்: இன்றுமுதல் ஆன்லைன் பதிவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்: இன்றுமுதல் ஆன்லைன் பதிவு
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆகஸ்ட் மாத தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலின் காரணமாக பக்தர்கள் முன்பதிவு செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture