வள்ளியூர் பேரூராட்சி 17வது வார்டு திமுக வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

வள்ளியூர் பேரூராட்சி 17வது வார்டு திமுக வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
X

ஊருகாய் கம்பெனியில் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட 17வது வார்டு திமுக வேட்பாளர் ஜீவா.

வள்ளியூர் பேரூராட்சி திமுக வேட்பாளர் ஊறுகாய் கம்பெனிக்கு சென்று ஊழியர்களுடன் அமர்ந்து பாக்கெட் போட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் பேரூராட்சி தேர்தலில் 17வது வார்டில் திமுக சார்பில் ஜீவா போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இவர் இன்று தனது 17வது வார்டில் அமைந்துள்ள ஊறுகாய் கம்பெனிக்கு சென்று ஊழியர்களுடன் அமர்ந்து ஊறுகாய் பாக்கெட் போட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார். பின்னர் அருகிலுள்ள மஞ்சள் தயாரிக்கும் கம்பெனிக்கு சென்று மஞ்சள் பொடி பாக்கெட் போட்டும் வாக்குகள் சேகரித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!