திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நாளை 9 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நாளை 9 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது
X
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நாளை 9 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் மாநகராட்சி சார்பில் நாளை 03 ம் தேதி பாளையங்கோட்டை சமாதானபுரம் எல்ஐசி அருகில், பழைய பேட்டை கார்காத்தார் சமுதாய நலக்கூடம், கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பாளையம்கோட்டை குலவர்ணிகபுரம் யாதவர் தெரு, எம்.வி புரம் கிருஷ்ணமகால் தச்சநல்லுார், மேலப்பாளையம் மாநகராட்சி கல்யாண மண்டபம், பாட்டபத்து ,பேட்டை ரகுமான் பேட்டை பள்ளிவாசல் மண்டபம், பெருமாள்புரத்தில் ஜோஸ் பள்ளி, ராணி மகால் மற்றும் வீடுவீடாக சென்று தடுப்பூசி என 9 மையங்களில் பொதுமக்கள் நாளை இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி நாளை காலை 9 மையங்களிலும் காலையில் டோக்கன் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பொதுமக்கள் உணவு உட்கொண்டு, தடுப்பூசி மையங்களுக்கு வரவேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்