வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
திருநெல்வேலி மாவட்டம் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலமாக வேளாண் காடுகள், நர்சரி செடிகள் அமைத்தல் பயிற்சி தோட்டக்கலை, காய்கறி மற்றும் பழவகை சாகுபடி பயிற்சி மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தகவல் தெரிவித்துள்ளார்
2021-22-ம் நிதியாண்டில் தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலமாக வேளாண் காடுகள், நர்சரி செடிகள் அமைத்தல் பயிற்சி தோட்டக்கலை, காய்கறி மற்றும் பழவகை சாகுபடி பயிற்சி மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் இந்து ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின இனத்தை சார்ந்தவாக இருத்தல் வேண்டும். விவசாயியாக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 லட்சத்திற்குள் மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், போலீஸ் ரிசர்வ்லைன் ரோடு, பாளையங்கோட்டை -627 002 என்ற முகவரியிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்:0462-2561012, 2902012. மாவட்ட மேலாளர் கைபேசி எண்: 9445029481-க்கு தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu