தனது சொத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போராட்டம்

தனது சொத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போராட்டம்
X

நெல்லையில் தாய்- தந்தையை இழந்த பெண் தனது சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

தனது சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாய், தந்தையை இழந்த பெண் ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம்.

நெல்லையில் தாய்- தந்தையை இழந்த பெண் தனது சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜனனி. இவரது தந்தை ரயில்வே தொழிலாளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஜனனியும் அவரது அம்மாவும் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அம்மாவும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இவரின் சொத்துகளை தந்தை வழியில் உள்ள உறவுக்காரர்கள் அபகரித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஜனனி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் தனது சொத்துக்களையும், தனது தந்தை சேர்த்து வைத்த பணத்தையும் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று ஜனனி மற்றும் அவரது உறவினர் ஒருவர் திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்த காவலர்கள் ஜனனியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் ஜனனி உடன்படவில்லை. தொடர்ந்து இதுபோல நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை புகார் கொடுத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் கண்டுகொள்ளாததால் நாங்கள் இங்கேயே தான் இருப்போம் என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது தாய், தந்தையர் இறந்த பிறகு நான் பள்ளிக்கு கூட செல்லவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து காவலர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக அதிகாரியிடம் மீண்டும் ஒரு மனுவை கொடுக்க வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் மாநகர காவல்துறை ஆணையாளரிடம் மனு கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனைத் தொடர்ந்து ஜனனி மற்றும் அவரது உறவினர் மாவட்ட ஆட்சியர் அவரைத் தொடர்ந்து சென்றனர். தாய் தந்தையரை இழந்த பெண் திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
ai in future agriculture