நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் ஆய்வு
X

நெல்லையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த மண்டல ஆய்வு கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பேசினார்.

நெல்லையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து 4 மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அளவில் மண்டல ஆய்வு கூட்டம், நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்து விளக்கப்பட்டன. கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் பழனி குமார் தலைமை உரையாற்றினார்.

Tags

Next Story
ai devices in healthcare