சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லை மாநகர் டவுன் பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான மேலப்பாளையம் மேல நத்தத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுரேஷ் (35) மற்றும் தென்காசி மாவட்டம் தேவர்குளம் முத்தம்மாள்புரத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வராஜ் (30) ஆகிய இருவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ள நிலையில், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K.சுரேஷ்குமார், டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார், மற்றும் டவுன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் (கூடுதல் பொறுப்பு) இந்திரா ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் உத்தரவின் படி, குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா