நெல்லை-திருமண மண்டபத்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த நகையை திருடிய இருவர் கைது

நெல்லை-திருமண மண்டபத்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த நகையை திருடிய இருவர் கைது
X
திருமண மண்டபத்தில் குழந்தையின் கழுத்தில் கிடந்த நகையை திருடிய இருவரை போலீசார் கைது செய்து நகையை கைப்பற்றினர்.

நெல்லை டவுண் பாட்டபத்து தெருவை சேர்ந்த ஆறுமுகம்(37) என்பவர் 02.08.2021 அன்று சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டநகரம் மைமூன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது மண்டபத்தில் வைத்து ஆறுமுகத்தின் மகள் கழுத்தில் இருந்த 10கிராம் செயினை காணவில்லை என்றதும் மண்டபத்தில் உள்ள CCTV கேமராவில் பார்த்துள்ளார். அதில் நெல்லையை சேர்ந்த சகாய நெல்சன் ராஜா(35)மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி(30) இருவரும் கழுத்திலிருந்து செயினை பறித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் செல்வி.மார்க்ரெட் தெரசா விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தார். மேலும் 10 கிராம் தங்க செயினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!