நெல்லையில் மதுசூதனன் படத்திற்கு அதிமுக சார்பில் மலர்தூவி அஞ்சலி

நெல்லையில் மதுசூதனன் படத்திற்கு அதிமுக சார்பில் மலர்தூவி அஞ்சலி
X

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி 

அதிமுக கழக அவைத் தலைவர் மறைந்த மதுசூதனனின் படத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா அஞ்சலி செலுத்தினார்

அதிமுக கழக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தச்சநல்லூரில் நடைபெற்றது. அவரின் திருஉருவப் படத்திற்கு அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நெல்லை மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், துணை செயலாளர் கவிதா, நெல்லை மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story