நெல்லை சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

நெல்லை சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
X

பைல் படம்.

திருநெல்வேலி காவல் சரக்கத்தில் 10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி காவல் சரக்கத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் உள்ளிட்டவருக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜகுமாரிக்கு தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளராகவும், பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாள குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராகவும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உளவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர் கோமதி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!