நெல்லை மாநகரத்தில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்-மாநகராட்சி ஆணையர்
திருநெல்வேலி மாநகராட்சி சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பராமரிப்பு பணி நடைபெறுவதால் தச்சை மண்டலம், வார்டு 8, 9 மற்றும் 10-வார்டுகளில் உள்ள பகுதிகளுக்கு 27.05.2021 மற்றும் 28.05.2021 ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலம், சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு வருகின்றது. ஆகவே பம்பிங் மெயின்லைன் பைபாஸ் சாலை அருகில் இரயில்வே இருப்பு பாதை அருகில் (சுப்பிரமணிய நகர்மேல்புறம்) HDPE 315MM dia பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பம்பிங் செய்யப்படும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் வால்வுகளை சரிசெய்யும் பணி 27.05.2021 மற்றும் 28.05.2021 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.
எனவே, தச்சநல்லூர் மண்டலம், வார்டு எண்: 8, 9 மற்றும் 10-ல் இளங்கோ நகர் ஆகிய பகுதிகளுக்கு 27.05.2021 மற்றும் 28.05.2021 ஆகிய 2 நாட்கள் குடிநீர்
விநியோகம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் .ஜி.கண்ணன் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu