நெல்லை சிந்துபூந்துறையில் திருமூர்த்த ஆலய கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
நெல்லை சிந்துபூந்துறையில் தருமபுர ஆதீன ஆறாவது குருமகாசன்னிதானத்தின் திருமூர்த்த ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தர்மபுர ஆதீனம் மதுரை ஆதீனம் வேளாக்குறிச்சி அதனால் செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் அமைந்துள்ள பல்வேறு சைவ சமய ஆதினங்களில் பழமையானது தருமபுரம் ஆதீனம் இந்த ஆதினத்தின் 6 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருஞான சம்பந்த தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருமூர்த்த ஆலயம் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது இன்றைய தினம் காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருக்கும் கும்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட மகா கும்பம் ஆதின தம்பிரான்கள் மூலம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருமூர்த்த ஆலய விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தருமபுர ஆதீன ஆறாவது குரு மகா சன்னிதானத்தின் திருமூர்த்திக்கு மகா கும்பாபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனத்தின் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன 18 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள், செங்கோல் ஆதீன 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதனை தொடர்ந்து ஆதீன குருமகா சன்னிதானம் கொலு காட்சியும் அதைத்தொடர்ந்து ஆசியும் நடைபெற்றது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu