மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பொது மக்களிடம்மனுக்கள் பெற்ற மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மேயர் பி.எம்.சரவணன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மேயர் பி.எம்.சரவணன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மேயர் பி.எம்.சரவணன் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்டம் கண்டியபேரி பகுதி-2 கிராமத்தில் வசிக்கும் லெட்சுமிக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ1000 பெறுவதற்கான அரசாணை திருநெல்வேலி தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வழங்கப்பட்டதையடுத்து லெட்சுமி அம்மாள் மேயர் அவர்களை நேரில் சந்தித்து அரசாணையினை பெற்றுக் கொண்டதற்கு தனது நன்றியினை தெரிவித்தார்.
மேலப்பாளையம் மண்டலம் பாரதி நகர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், சீரான குடிநீர் வழங்க வழியுறுத்தியும், தச்சை மண்டலம் பாலபாக்யா நகரை சார்ந்த சிவசுப்பிரமணியன் அளித்த மனுவில் பாதாள சாக்கடை அமைத்து தரவும், பாளை மனகாவலம்பிள்ளை நகர் வனஜா அளித்த மனுவில் கழிவு நீரோடை அமைத்து தரவும், திடீயூர் அந்தோணிதுரை அவர்கள் அளித்த மனுவில்,
தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்க கோரியும், மாமன்ற உறுப்பினர் கோகிலவாணி சுரேஷ் அளித்த மனுவில் மேகலிங்கபுரத்தில் கழிவுநீரோடையினை அகலபடுத்திடவும், பாளை மண்டலம் மாரியம்மாள் அளித்த மனுவில் அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டும், அன்பு அங்கப்பன் அளித்த மனுவில் கேடிசி நகரில் பூங்கா வாகன காப்பகம் அமைக்க கோரியும், நெல்லை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் அருள்மிகு நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதிதாக சாலை அமைத்து தரகேட்டும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பாலன் (எ) ராஜா அளித்த மனுவில் ரயில்வே மேம்பாலம் அருகில் தெருவிளக்கு அமைத்து தர கேட்டும், தச்சை மண்டலம் வடக்கு மற்றும் தெற்கு கரையிருப்பு ஊர் பொது மக்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டும் போன்ற மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திட மேயர் பி.எம்.சரவணன் அவர்கள் அறிவுறுத்தினார்.
இம்முகாமில் மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், கதிஜாஇக்லாம்பாசிலா, ரேவதி, மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், தச்சை உதவி ஆணையாளர் (பொ) லெனின், திருநெல்வேலி மண்டல உதவி ஆணையாளர் (பொ) பைஜூ, உதவி செயற்பொறியாளர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu