தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஜூன் 23ல் துவக்கம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது.
Tamilnadu Cricket Match - 6வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது
நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இந்த போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது.
இதில் பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் செயலாளர் ராமசாமி 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் டிஎன்பிஎல் போட்டிகள் நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. நெல்லையில் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆதரவு அதிகமாக எப்போதும் இருக்கும் இந்த ஆண்டு கூடுதலாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேட்டி அளித்த பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌசிக் காந்தி தொடர்ந்து - இரண்டு முறை அணி வெற்றியை பெற்றுள்ளது. இந்த முறை கூடுதல் அழுத்தத்துடன் விளையாட இருக்கிறோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வெற்றி பெற்றாலும் முதல் முறை விளையாடுவது போன்ற அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி விளையாடுகிறோம் என தெரிவித்தார்.
மேலும் டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன் வீரர்கள் டிவியில் வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர் பல்வேறு இடங்களில் இருந்து முழு ஆதரவோடு வீரர்கள் விளையாடி வருகின்றனர். டிஎன்பிஎல் விளையாட்டுக்கு பின் தமிழ்நாடு அணி ஒயிட் பால் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதோடு தொடர்ந்து கோப்பைகளையும் பெற்று வருகிறது என தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu