நெல்லையில் "இறைவன் விரும்பிய அடியார்" ஆன்மீக நூல் வெளியீட்டு விழா

நெல்லையில் இறைவன் விரும்பிய அடியார் ஆன்மீக நூல் வெளியீட்டு விழா
X

நெல்லையில் இறைவன் விரும்பிய அடியார் என்ற ஆன்மீக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நெல்லையில் இறைவன் விரும்பிய அடியார் என்ற ஆன்மீக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நெல்லையில் இறைவன் விரும்பிய அடியார் என்ற ஆன்மீக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நெல்லையில் துணி வணிகர் இலக்கிய வட்டம் மற்றும் தாமிரபரணி இலக்கிய மன்றத்தின் சார்பில் இறைவன் விரும்பிய அடியார் என்ற ஆன்மிக நூல் வெளியீட்டு விழா நெல்லை டவுன் சோனா கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணி வணிகர் இலக்கிய வட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். தென்திருப்பதி மேலதிருவேங்கடநாதபுரம் தலைமை அர்ச்சகர் முரளி, வி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தையா வரவேற்புரையாற்றினார். திருக்கைலாய பரம்பரை 103வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக் சத்திய ஞானபரமாச்சார்ய சுவாமிகள் நூலை வெளியிட ம.தி.தா. இந்து கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயலாளர் செல்லையா, சோனா சில்க்ஸ் அதிபர் சங்கரநாராயணன், மேல திருவேங்கடநாதபுரம் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பொருநை இலக்கிய வட்ட நிர்வாகி தளவாய் திருமலையப்பன், உலகத் திருக்குறள் தகவல் மைய நிர்வாகி பாப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் பொன் வள்ளிநாயகம், கணேசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறைவன் விரும்பிய அடியார் நூலாசிரியர் கவிஞர்.பாமணி ஏற்புரையாற்றினார். மணிமாலா சிவராமன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture