சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த இணையவழி கருத்தரங்கு
இணையவழி கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.
சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் மற்றும் சிவிக் ஆக்சன் குரூப் (சி.ஏ.ஜி) திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் ஆகியன இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கை, இணைய வழியில் நடத்தின.
மாநில அளவில் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், சவால்களை புரிந்து தக்க நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து அலுவலர்கள், காவல் அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், நுகர்வோர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், இதில் கலந்து கொண்டனர். இதில், சாலை பாதுகாப்பில் திருநெல்வேலி, திருவாரூர் மாவட்டத்தின் செயல்பாடுகள் என்ற பொருண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கில், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு நெறி முறைகளை தவிர்த்தல், கைபேசி பயன்பாட்டால் ஏற்படும் கவனச்சிதறல், அதோடு வாகனம் ஓட்டுவது மற்றும் சாலைவடிவமைப்பு மாசுபாடு, சுற்றுச்சூழல் போன்ற பல காரணிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சி.ஏ.ஜி. மூத்த ஆராய்ச்சியாளர்; சுமனா நாராயணன் கூறுகையில், பொதுமக்கள், தொழிற்சங்கம் ,அரசு அதிகாரிகள் மற்றும் சட்டவல்லுநர்களுடன் விவாதித்தும் சாலை பாதுகாப்பு சட்டம் மாவட்டத்தில் அதன் இன்றைய நிலை,நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் போன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
திருநெல்வேலி கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் பேசும்போது, இளைஞர்கள், மாணவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக சைக்கிள் அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது என்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் பேசுகையில், விழிப்புணர்வு மற்றும் அமலாக்கத்தின் காரணமாக நெல்லையில் சுமார் 40% விபத்துக்கள் குறைந்து உள்ளது மீண்டும் மீண்டும் குற்றங்கள் ஏற்படுத்தினால், உரிமங்கள் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும் என்று எச்சரித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதியான சவுந்தரராஜன் திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன், திருவாரூர் போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முன்னதாக, கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களை, திருவாரூர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆர். ரமேஷ் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்ரமணியன் நன்றி கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சி.ஏ.ஜி. இயக்குனர் சரோஜா செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu