நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நெல்லையில்  எஸ்டிபிஐ கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் வரவேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை மாநகர் மாவட்ட எஸ்டிபிஐ ( SDPI ) கட்சியின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வரவேற்பளிக்கும் விதமாக நெல்லை சட்டமன்ற தொகுதியின் பேட்டை கிழக்குப் பகுதி சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிழக்குப் பகுதி தலைவர் எம்.எ.கே.ஜெய்லானி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் பசுமை பீர் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொகுதி நிர்வாகிகள் இலியாஸ், கவுஸ், முகம்மது காசீம், அசனார் மற்றும் டவுன் காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை மாநகர் மாவட்டத்தின் தலைவர் ஷாகுல் ஷமீது உஸ்மானி, பொதுச் செயலாளர் ஹயாத் முகம்மது, மாவட்ட செயலாளர்கள் பேட்டை முஸ்தபா ,பர்கிட் அலாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் காதர், சேக் அப்துல்லா, ரினோஷா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 25 ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது. சிறுநீரக செயலிழப்பு நோயாளி ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 8000 வழங்கப்பட்டது. 25 ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 25 பனை விதைகள் நடுவதற்கு விதைகள் பகுதி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. இறுதியாக தொகுதி பொருளாளர் அப்துல் சலாம் நன்றியுரையாற்றினார்.



Tags

Next Story
ai solutions for small business