நெல்லையில் முன்களப்பணியாளர்கள் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நெல்லையில் முன்களப்பணியாளர்கள் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

நெல்லை மாநகரில் பணிபுரியும் முன் களப்பணியாளர்கள் 300 பேருக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை ஆணையாளர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.

நெல்லை மாநகராட்சியில் உள்ள 300 முன்களப்பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆணையாளர் வழங்கினார்.

நெல்லை மாநகரில் பணிபுரியும் முன் களப்பணியாளர்கள் 300 பேருக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் வேண்டுகோளின் படி தனியார் நிறுவனம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் 300 முன் களப்பணியாளர்களுக்கு ரூபாய் 350 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்களப்பணியாளர்களுக்கு மளிகை பொருள் தொகுப்பை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.

ஒரு மண்டலத்திற்கு 75 பேர் விதம் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள முன்களப்பணியாளர்கள் 300 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, சீனி, உப்பு ஆகியவை தலா ஒரு கிலோ மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, வத்தல் பொடி ஆகியவை தலா 100 கிராம் அளவிலான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

இதில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், தஞ்சை மண்டல உதவி ஆணையாளர் ஐயப்பன், சுகாதார அலுவலர்கள் சாகுல் ஹமீது, முருகேசன், சுப்பிரமணியன் சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், இளங்கோ, டவுன் முருகன், சங்கரநாராயணன், பாலசுப்பிரமணியன், நடராஜன், அந்தோணி மற்றும் கவின் தீபக், சுப்பிரமணியன் மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!