ஜிஎஸ்டி வரியால் பதிவு செய்யப்பட்ட சிட்பண்ட் நிறுவனங்களுக்கு சிக்கல்

ஜிஎஸ்டி வரியால் பதிவு செய்யப்பட்ட சிட்பண்ட் நிறுவனங்களுக்கு சிக்கல்
X

திருநெல்வேலியில்  செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சிட் பண்ட் அசோசியேசன் துணைத் தலைவர் அருணகிரி முருகன்

பதிவு செய்யப்பட்ட சீட்டு நிதியகங்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு ஏழை எளிய மக்கள் சேமிக்க முடியாத நிலை உருவாகும்

பதிவு செய்யப்பட்ட சீட்டு நிதியகங்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. தொடர் வரி உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் சேமிக்க முடியாத நிலை உருவாகும் என சிட்பண்ட் உரிமையாளர்கள் தெரிவித்தனர்

இது தொடர்பாக திருநெல்வேலியில் தமிழ்நாடு சிட் பண்ட் அசோசியேசன் துணைத் தலைவர் அருணகிரி முருகன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

இந்தியா முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட சீட்டு நிதியங்கள் உள்ளது. தமிழகத்தில் இதன் எண்ணிக்கை 2600 ஆக இருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சேமிப்பிற்கு சீட்டு நிதியங்கள் முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில் சீட்டு நிதியகங்கள் வைப்பு தொகையாக 40 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் உள்ளது. பதிவு பெற்ற சீட்டு நிதியங்கள் 5% கமிஷனாக பெற்று வருகிறார்கள். இதற்கு மத்திய அரசு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்திருந்தது. இந்த வரி வரும் 15ஆம் தேதி முதல் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பதிவு செய்யப்படாத நிதியகங்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.

நாட்டில் ஒரு சதவீத நிறுவனங்கள் மட்டுமே முழுமையாக பதிவு செய்யப்பட்டு முறையாக சீட்டுகளை நடத்தி வருகிறோம். 99 சதவீதம் தரப்பினர் பதிவு செய்யப்படாமலேயே சீட்டுகளை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பதிவு செய்யப்பட்ட எங்களது நிறுவனங்களுக்கு 12 சதவீதம் நாங்கள் பெரும் கமிஷனுக்கு ஜிஎஸ்டி வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த வரி தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு வரும் 12 சதவீத வரியை ரத்து செய்யக்கோரி பலமுறை நாங்கள் முறையிட்டோம். ஆனால் ஜிஎஸ்டி வரி உயர்வு தொழில் நடத்த முடியாத சூழலை உருவாக்கும். முறையாக அனுமதி பெறுவதற்கு வங்கியின் வரைவோலை பெற்று பதிவு அலுவலகங்களில் சமர்ப்பித்த பிறகே சீட்டுகளை நடத்த முடியும். இது போன்ற வரி உயர்வு தொழில் நடத்துபவர்களை கடுமையாக பாதிக்கும். தொடர்ந்து தொழில் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தும். இதன் காரணமாக வங்கிகளில் வைப்புத் தொகையாக இருக்கும் 40 ஆயிரம் கோடி ரூபாய் குறைய துவங்கும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சேமிக்க முடியாத நிலையை உருவாக்கும். பதிவு பெறாத நிறுவனங்களில் அவர்கள் சீட்டுக்களை போட்டு ஏமாறும் நிலை ஏற்படும். அரசு உடனடியாக இதனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட வரியை நீக்குவதோடு வரியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின் போது தமிழ்நாடு சிட்பண்ட் அசோசியேசன் இணைச்செயலாளர் முருகேசன், மதுரை, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வேல்முருகன்,செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன்,அருணாச்சலம் புருஷோத்தமன் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil