கொரோனாவில் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு பிரதமரின் நலத்திட்ட உதவிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரதப்பிரதமர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரதப்பிரதமர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரதப்பிரதமர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப, திருநெல்வேலி மாநகராட்சி மேயர்பி.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜீ ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரதப்பிரதமர் பராமரிப்புத் திட்டத்தில் ( pm care for children) நிதியுதவிக்கான வைப்பு பத்திரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழநத 13 குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், பிரதம மந்திரி பாதுகாப்புத் திட்டம் குறித்த விளக்க கையேடு, ஐந்து வருடத்திற்கான ஆயுள் காப்பீட்டு அட்டை,கல்வி உதவித்தொகை, பிரதம மந்திரி பாதுகாப்பு திட்ட சான்றிதழ், ரூ.10 லட்சத்திற்கான வைப்புநிதி செலுத்தப்பட்ட அஞ்சல் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை அடங்கிய பெட்டகத்தினை 13 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆபெருமாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கு.உஷா, மாவட்ட தேசிய தகவலியல் மேலாளர் தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu