பள்ளி மாணவர்களுக்கு போக்சோ, கொரோனா குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு போக்சோ, கொரோனா குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு
X

தேவர்குளம் இருதய மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை மாவட்ட காவல்துறையினர் ஏற்படுத்தினார்கள்.

தேவர்குளத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போக்சோ சட்டம், கொரோனா பற்றிய விழிப்புணர்வை மாவட்ட காவல்துறையினர் ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று போக்சோ சட்டம் பற்றியும், கொரோனா தடுப்பு முறைகள் குறித்து மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் தேவர்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரோச் அந்தோனி ராஜ், தேவர்குளம் இருதய மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது காவல்துறையினர் மாணவ மாணவிகளிடம் கூறியதாவது:- பள்ளி செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் தங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரேனும் பேச்சுக் கொடுத்தால் அவர்களிடமிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். உடனடியாக காவல் நிலையத்திற்கு அல்லது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்.

மேலும் அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாணவ-மாணவிகள் அனைவரும் பின்பற்றவேண்டும். ஏற்கனவே பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு கொடுக்கப்பட்டிருக்கும். அதனை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!