நெல்லையில் மே 21ம் தேதி போட்டோ, வீடியோ கண்காட்சி துவக்கம்
நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் போட்டோ, வீடியோ கண்காட்சி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டன.
நெல்லை போட்டோ மற்றும் வீடியோ கண்காட்சி மற்றும் 7வது ஆண்டு ஒளிப்பட சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஜங்ஷன் ஆர்.ஆர் இன்.ஓட்டலில் வரும் மே 21ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி 2 நாட்கள் நடக்கிறது.
இதில் தமிழகத்தின் முன்னணி டிஜிட்டல் போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவு சாதனங்கள், டிஜிட்டல் இமேஜிங் கிரியேட்டிவ் ஆல்பம் மற்றும் நவீன தொழில்நுட்ப போட்டோ, வீடியோ உபகரணங்கள் இடம் பெறவுள்ளன.
கண்காட்சியில் புதிய கேமராக்கள் அறிமுகம், போட்டோ மற்றும் வீடியோ பயற்சி வகுப்பு, லைட்டிங் பயிற்சி வகுப்பு, கேண்டிட் வீடியோ மற்றும் பயிற்சி வகுப்பு, எடிட்டிங் சாப்ட்வேர் பயிற்சி வகுப்பு, எல்.இ.டி., பயிற்சி வகுப்பு நடக்கிறது.
நிகழ்ச்சியில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம், இதய நோய் கண்டறியும் முகாம் நடக்கிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஒளிப்பதிவு சாதனையாளர்களுக்கு கிராபிபோட்டோ, செல்பி போட்டோ கிராபி வீடியோ பதிவு, குறும்படம் போன்ற போட்டிகள் நடக்கிறது.
மேலும் தகவல் அறிய விரும்புபவர்கள் 9443182109, 7418844496 என்ற அலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.
மே 20ம் தேதிக்குள் தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பொதுமக்களுக்கு கண் காட்சியை கண்டுகளிக்க இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
கண்காட்சியை ஆர்.ஆர்.ஆர் ஸ்டூடியோ அண்ட் கோல்டு விஷன், நெல்லை ஸ்டார் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேஷன், மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நலச்சங்கம், பிரின்ட் மீடியா பார்ட்னராக தினமலர் இணைந்து வழங்குகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu